அதிமுக விவகாரம்: பாஜக போடும் கணக்கு என்ன?

அதிமுக விவகாரம்: பாஜக போடும் கணக்கு என்ன?
X

பைல் படம்

ஓபிஎஸ் - எடப்பாடி சேர்ந்து இருந்தால்தான் தங்களுக்கு பாதுகாப்பு என்று பாஜக நினைக்கிறது.

ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து இருந்தால்தான் கட்சிக்கும் கூட்டணிக்கு நல்லது என்ற கருத்து அதிமுக தொண்டர்களிடம் பரவிக்கிடக்கிறது.

இதைதான் சிடி ரவி, அண்ணாமலை குறிப்பிட்டார்கள். இவர்கள் சேர வேண்டும். தனியாக இருந்தால் நமக்குத்தான் சிக்கல். நமக்கு லாபம் இல்லை என்று டெல்லி நினைக்கிறது. தமிழ்நாட்டில் கூட சிலர் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்தாலும் கூட டெல்லி இந்த விவகாரத்திலும் இரண்டு பேருமே ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் இப்போது இருவரும் சேர வேண்டும் என்றும் டெல்லி தரப்பு நேரடியாக, வெளிப்படையாக கோரிக்கை வைத்து இருக்கிறது. எடப்பாடி மட்டும் தனியாக இருந்தால் வெல்ல முடியாது என்று பாஜக நினைக்கிறது

ஓபிஎஸ்தான் பாஜகவிற்கு மிகவும் நெருக்கம். அதிமுக - பாஜக கூட்டணி என்ற ஸ்கிரீனை பாதுகாப்பதே ஓபிஎஸ் என்ற டெம்பர் கிளாஸ் தான். இந்த கிளாஸை உடைத்து விட்டு, கூட்டணியை முறிக்கலாம் என்று எடப்பாடி நினைத்தார். அதை தான் தற்போது டெல்லி பாஜக தடுத்து இருக்கிறது. இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று டெல்லி பாஜக கூறி உள்ளது. இருவரும் ஒன்றாக இருந்தே தோல்வி அடைந்து விட்டனர். தனியாக இருந்தால் வெல்ல முடியாது என்பதால் தான் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்போது தான் தங்கள் கூட்டணிக்கும் நல்லதாக இருக்கும் என்று பாஜக நினைக்கிறது.

இரட்டை இலை இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் பல சிக்கல்கள் உள்ளன. முக்கியமாக தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் கொடுத்துள்ளனர். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இன்னொரு பக்கம் இந்த விவகாரத்தில் கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகளை பெற்றுள்ளனர். அந்த பொதுக்குழு உறுப்பினர்கள் தான் கடிதத்தை அனுப்புகிறார்களா? இதில் போர்ஜரி நடக்கவில்லையா என்று கண்டுபிடிப்பது எப்படி? இதை எப்படி கண்டுபிடிப்பார்கள். எப்படியோ தேர்தல் ஆணையம் இதில் முடிவு எடுத்து விட்டது.

இந்த தீர்ப்பு இரண்டு தரப்பிற்கும் சமமான தீர்ப்பு தான். இரண்டு தரப்பிற்கும் சமமான தீர்ப்பாக டிரா மேட்ச் போல இந்த தீர்ப்பு வந்துள்ளது. அதனால் தான் எடப்பாடி பழனிசாமி தரப்பும் இந்த தீர்ப்பு காரணமாக அப்செட் ஆகி உள்ளது. இரண்டு பேருமே சேர விரும்பவில்லை போல. ஆனால் இவர்களை கஷ்டப்பட்டு சேர்த்து வைத்துள்ளனர். ஓ பன்னீர்செல்வம் இந்த தீர்ப்பு மூலம் அதிமுகவிற்குள் வந்து விட்டதாக நினைக்கிறார். ஆனால் இது இடைக்கால தீர்ப்பு தான். இது எல்லாம் ஓ பன்னீர்செல்வத்திற்கு இறுதி தீர்ப்பு என்பது பொதுக்குழு வழக்கில் தான் கிடைக்கும். இந்த தீர்ப்பை வைத்து பொதுக்குழு தீர்ப்பை கணிக்க முடியாது. இந்த தீர்ப்பு கிட்டத்தட்ட டிரா செய்த தீர்ப்புதான். ஏற்கெனவே தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்கவில்லை.

பொதுக்குழு முடிவுகளை ஏற்கவில்லை என்று கூறி உள்ளது. அதை எதிர்க்கும் விதமாக பொதுக்குழு தீர்ப்பு வரும் என்று நினைக்கவில்லை. எடப்பாடி- ஓபிஎஸ் ஆகியோரை பாஜக இணைக்க பார்க்கிறது. ஆனால் எடப்பாடி இதற்கு ஏற்றுக்கொள்ளவே மாட்டார். ஓபிஎஸ்ஸுடன் இணையும்படி பிரஷர் கொடுத்தால், பாஜகவை எதிர்க்க கூட எடப்பாடி துணிந்துவிடுவார் என்பதே அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!