ஓபிஎஸ் அணிஅவசர ஆலோசனை

ஓபிஎஸ் அணிஅவசர ஆலோசனை
X

ஓ. பன்னீர்செல்வம்(பைல் படம்)

அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி முறிந்த நிலையில் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதிமுக- பாஜக கூட்டணி என்பது முறிந்துபோய் உள்ளது. இத்தகைய சூழலில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக புதிய கூட்டணி அமைத்து களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது.

திமுக, அதிமுக கூட்டணியில் இணையாத பிற கட்சிகளை சேர்த்து மூன்றாவது அணியை தமிழகத்தில் கொண்டு வர பாஜக திட்டமிடலாம் என கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திடீரென்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், குப கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் உள்பட பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மாலை 6 மணிக்கு தொடங்கி இந்த கூட்டம் 8 மணியை தாண்டியும் நடந்து வந்தது. இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் வியூகங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதாவது தற்போது தமிழ்நாட்டில் பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துள்ளது. இதனால் பாஜக தங்களுக்கு அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளது. அப்படி பாஜக அழைப்பு விடுத்தால் என்ன முடிவு எடுக்கலாம்? கூட்டணியில் இணைந்தால் எந்தெந்த தொகுதிகளை கேட்கலாம்? என்பது பற்றியும் விவாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!