தேனீக்களிடம் கொட்டு வாங்கிய தேனி கலெக்டர், அமைச்சர்கள் எஸ்கேப்

தேனீக்களிடம் கொட்டு வாங்கிய தேனி கலெக்டர்,  அமைச்சர்கள் எஸ்கேப்
X

தேனி மாவட்டத்தில் வைகை அணை திறப்பின் போது தேனீக்களிடம் கொட்டு வாங்கிய அதிகாரிகள்.

வைகை அணையில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் தேன்கூடு கலைந்ததால், கலெக்டர் முரளிதரன், தேனீக்களிடம் கொட்டு வாங்கினார். அமைச்சர்கள் நூலிழையில் தப்பினர்.

இன்று காலை நான்கு மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து அமைச்சர்கள் பெரியசாமி, மூர்த்தி உட்பட பலர் தண்ணீர் திறந்து விட்டனர்.

இந்த நிகழ்ச்சியி்ல் தேனி கலெக்டர் முரளிதரன், பெரியாறு- வைகை வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சுகுமார் உட்பட ஏராளமான பலர் பங்கேற்றனர்.

அமைச்சர் தண்ணீர் திறந்ததும், பாலத்திற்கு அடியில் கட்டப்பட்டிருந்த தேன்கூடு கலைந்தது. தேனீக்கள் பறந்து கலெக்டர் முரளிதரன், கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், மற்றும் பொதுப்பணித்துறை பணியாளர்கள் உட்பட 8 பேரை பலமாக கொட்டியது.

சுதாரித்துக் கொண்ட அமைச்சர்களும், மற்ற அதிகாரிகளும், பத்திரிக்கையாளர்களும் அங்கிருந்து வெளியேறினர். தேனீக்களிடம் கொட்டு வாங்கிய தேனீ கலெக்டர் உட்பட 8 பேர் உடனடியாக மீட்டு தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அத்தனை பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்றவர்களை கலெக்டர் முரளிதரன் சந்தித்து நலம் விசாரித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்