தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் மாணவர் சேர்க்கை..!
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் அண்ணாச்சி மாணவிக்கு வழங்கினார். உடன் உறவின்முறை நிர்வாகிகள்.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைக்கு சொந்தமாக ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில் தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியும் ஒன்று. இந்த கல்லுாரி மாநில அளவில் சிறந்த பொறியியல் கல்லுாரிகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வுகள் முடிவடைந்த நிலையில், இந்த கல்லுாரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை தொடங்கியது. இதற்கான சிறப்பு பூஜை உறவின் முறைக்கு சொந்தமான பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோயிலில் நடந்தது. இந்த பூஜையில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் டி.ராஜ்மோகன் அண்ணாச்சி, துணைத்தலைவர் பி.பி.கணேஷ், பொருளாளர் எம்.பழனியப்பன், பொதுச் செயலாளர் எம்.எம்.ஆனந்தவேல், தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி செயலாளர்கள் எ.ராஜ்குமார், ஏ.எஸ்.ஆர்., மகேஸ்வரன், துணைச் செயலாளர் நவீன்ராம், கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம், துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, மற்றும் பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், விண்ணப்பம் வாங்க வந்த மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
பூஜை நிறைவடைந்ததும், உறவின்முறை தலைவர் டி.ராஜ்மோகன் அண்ணாச்சியும், இதர நிர்வாகிகளும் மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கினர். அங்கேயே மாணவர் சேர்க்கை தொடங்கியது. தொடர்ந்து மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைமை அலுவலகம் மற்றும் தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கல்லுாரி அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் மாணவ, மாணவிகளுக்கு கவுன்சிலிங்கில் பங்கேற்க தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கவும், அரசின் கல்விக்கடன் பெறவும், மாணவ, மாணவிகள் ஸ்காலர்ஷிப் பெறவும் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கவும் கல்லுாரி பேராசிரியர்கள், ஊழியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இந்த இடங்களில் பணி நேரங்களில் அமர்ந்து மாணவ, மாணவிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவார்கள் என முதல்வர் மதளைசுந்தரம் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu