திருமணம் ஆகி 4 மாதத்தில் குழந்தை: சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா-விக்னேஷ் ஜோடி

திருமணம் ஆகி 4 மாதத்தில் குழந்தை:  சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா-விக்னேஷ் ஜோடி
X

நயன்தாரா-விக்னேஷ் தம்பதி(பைல் படம்)

Nayanthara Latest News -நடிகை நயன்தாரா-விக்னேஷ்சிவன் ஜோடி திருமணம் ஆகி 4 மாதத்தில் இரட்டைக் குழந்தை பெற்ற விவகாரம் ஹாட் டாப்பிக் ஆகி உள்ளது

Nayanthara Latest News -நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்துள்ளன. இருவருக்கும் திருமணம் நடந்து 6 மாதம் கூட முழுமையாக ஆகவில்லை. இந்த நிலையில் தான் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

திருமணம் ஆகி 4 மாதங்களில் குழந்தை பிறந்தது எப்படி என்று நெட்டிசன்கள் பலர் தேவையற்ற விவாதங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இவர்களுக்கு குழந்தை பிறந்தது தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியாகி உள்ளன.அதன்படி இவர்கள் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. அதாவது நயன்தாரா வயிற்றில் கரு வளராமல், வேறு ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்ந்து, இவர்கள் குழந்தை பெற்றுள்ளனர். தமிழ் சினிமா உலகில் இப்படி குழந்தை பெறும் முதல் தம்பதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடகைத் தாய் விவகாரம் என்பது இந்தியாவில் பல வருடமாக சர்ச்சையில் இருக்கும் விஷயம். இதை பற்றி கடந்த 20 வருடங்களாக தீவிர விவாதங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள 20 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும். அதாவது கருவை உருவாக்க, வாடகைத் தாய்க்கு செலவு செய்ய, அவருக்கான தனிப்பட்ட கட்டணம், குழந்தை பிறக்கும் போது உள்ள மருத்துவ செலவு, குழந்தை பிறந்த பின் உள்ள மருத்துவ செலவு எல்லாம் சேர்த்து 20 லட்சம் வரை ஆகும்.

இந்தியாவில் இருக்கும் பெண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வெளிநாட்டவர்கள் அதிகம் விரும்பும் நிலையில், வாடகைத் தாய் மார்க்கெட் இந்தியாவில் மிகப்பெரியதாக இருந்தது. கடந்த 2005 முதல் 2015ம் ஆண்டு வரை வெளிநாட்டு தம்பதிகளுக்கு வாடகைத் தாய் மூலம் 25 ஆயிரம் குழந்தைகள் இந்தியாவில் பிறந்துள்ளன. அந்த அளவிற்கு இந்தியாவில் வாடகைத் தாய் மிகப்பெரிய மார்க்கெட்டாக இருந்தது. அதிகமாக வெளிநாட்டு தம்பதியினர், வெளிநாட்டு ஒரு பாலினத்தவர்கள் இப்படி வாடகைத் தாய் முறைக்கு இந்திய பெண்களை நாடினர்.

கடந்த 2015ல் வெளிநாட்டினர் இந்தியாவில் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் இந்தியாவிற்கு உள்ளே இரண்டு வகையான வாடகைத் தாய் முறைகள் உள்ளன. முதல் முறை Surrogacy in the traditional sense அதாவது பாரம்பரிய வகை. இந்த வகை மூலம் தம்பதி ஆணின் விந்தணு எடுக்கப்பட்டு வாடகைத் தாய் செயற்கையான முறையில் கருவூட்டப்படுகிறார்.

இதில் வாடகைத் தாய் தான் குழந்தையின் உயிரியல் தாய். ஆனால் அந்த ஆணின் மனைவி சட்ட ரீதியாக தாயாக கருதப்படுவார். இதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு விட்டது. இரண்டாவது முறை Gestational surrogacy எனப்படும் கர்ப்பகால வாடகைத் தாய் முறைக்கு தடை இல்லை. 2013லேயே ஒருபாலினத்தவர்கள் இந்த முறை மூலம் குழந்தை பெற இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. 2016ல் மொத்தமாக வாடகைத் தாய் முறையை தடை செய்ய மசோதா கொண்டு வரப்பட்டது. கடைசியில் கடந்த வருடம் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த தடை மொத்தமாக சட்டமாகி அமலுக்கு வந்தது.

இரண்டாவது முறையான கர்ப்பகால வாடகைத் தாய் முறைக்கு இந்தியாவில் இன்னும் தடை விதிக்கப்படவில்லை. இந்த முறையில் ஆணின் விந்தணு, அவரின் மனைவியின் கரு முட்டையுடன் சேர்ந்து கருவாக உருவாக்கப்படும். பின்னர் அந்த கரு வாடகைத் தாயின் வயிற்றில் சேர்க்கப்படும். இது தான் கர்ப்பகால வாடகைத் தாய் முறை. இந்த முறையின் படி, கருவுற முடியாத பெண்கள் மட்டும் குழந்தை பெற்றுக்கொள்ள இந்தியாவில் அனுமதி உள்ளது. கருவுற முடியாத பெண்கள் மட்டும் இதில் குழந்தை பெற்றுக்கொள்ள இப்போதும் இந்தியாவில் அனுமதி உண்டு.

நடிகை நயன்தாரா அந்த முறை மூலம் குழந்தை பெற்றுள்ளார். அதுவும் இரட்டை குழந்தையாக அவர் பெற்றுள்ளார். தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் இப்படி குழந்தை பெற்றுள்ளதால் அதை வைத்து பலர் கடுமையான விவாதங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் விவாதம் செய்து வருகின்றனர். தமிழக அரசோ இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த விஷயம் எப்படி செல்லும் என்பதை காத்திருந்துதான் பார்க்க முடியும்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்