ரோஜாவின் ராஜபார்வை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க...
நடிகை ரோஜா எம்.பி.பி.எஸ்.,படிக்க வைக்கும் ஏழை மாணவி புஷ்பா. அருகில் செல்வமணி.
சினிமா நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான நடிகை ரோஜா ஒரு ஏழைப்பெண்ணை தனது சொந்த செலவில் எம்.பி.பி.எஸ்., படிக்க வைத்து வருகிறார்.
செம்பருத்தி என்ற தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி, தமிழக சினிமா உலகை கலக்கியவர் நடிகை ரோஜா. இவர் செம்பருத்தி பட இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டு ஆந்திராவில் செட்டில் ஆகி விட்டார். இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் படித்து வருகின்றனர். நடிகை ரோஜாவின் மகள் சினிமாவில் நடிக்க உள்ளதாக பரவிய தகவலை அவரது தந்தை செல்வமணி மறுத்து விட்டார்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் சேர்ந்துள்ள நடிகை ரோஜா, நகரி தொகுதிக்கு எம்.எல்.ஏ.,வாக உள்ளார். ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராகவும், இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
இரண்டு ஆண்டுகளுகளுக்கு முன்பு ஏழைக்குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தையை இழந்த புஷ்பா என்கிற பெண்ணை ரோஜா- செல்வமணி தம்பதியினர் தத்து எடுத்தனர். அந்த பெண்ணின் படிப்பு செலவுகள் முழுவதையும் ஏற்றுக் கொண்டனர். பிளஸ் 2 முடித்த அந்த மாணவி, நீட் தேர்வில் மகத்தான வெற்றி பெற்று எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி விட்டார். இவருக்கு திருப்பதி பத்மாவதி மகளிர் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்துள்ளது. இவர் எம்.பி.பி.எஸ்., அதற்கு பின் மருத்துவ மேற்படிப்பும் படிக்க தேவையான முழு செலவுகளையும் ரோஜா- செல்வமணி தம்பதியினரே ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தாங்கள் வளர்க்கும் குழந்தை நீட் தேர்வில் வெற்றி பெற்றதை அறிவித்த ரோஜா- செல்வமணி தம்பதியினர், அந்த பெண்ணின் மருத்துவ படிப்பிற்கான அத்தனை செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்தனர். அந்த பெண்ணுக்கு சால்லை அணிவித்து பாராட்டினர். பின்னர் அந்த பெண்ணை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்து வைத்தனர்.
பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசிய புஷ்பா என்ற அந்த பெண், 'தான் மிகுந்த ஏழைக்குடும்பத்தில் பிறந்துள்ளதாகவும், தனது தாயும், தந்தையும் மருத்துவ சிகிச்சை பெற வசதியில்லாமல், இறந்து விட்டதாகவும், இந்நிலையில் வாழ்க்கை தன்னை அமைச்சர் ரோஜாவிடம் கொண்டு வந்து சேர்த்ததாகவும், அவர்கள் மூலம் பள்ளிப் படிப்பை முடித்த தான், தற்போது எம்.பி.பி.எஸ்., படித்து வருவதாகவும் தெரிவித்தார்.
தன்னை போல் எந்த ஒரு ஏழைக் குழந்தையும் மருத்துவ வசதிகள் இன்றி தனது பெற்றோரை இழந்து விடக்கூடாது. அவர்களும் இறந்து விடக்கூடாது என்ற எளிய சிந்தனையினை செயல்படுத்த தான் மருத்துவ படிப்பு முடித்ததும், ஏழைகளுக்காக இலவசமாக மருத்துவ சேவை வழங்க உள்ளதாகவும் மாணவி புஷ்பா தெரிவித்தார். அவரை செல்வமணி- ரோஜா தம்பதியினர் சால்லை அணிவித்து பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu