கூடலுாரில் சிவன் கோவில் சொத்துகளை மீட்க நடவடிக்கை: எதிர்பார்ப்பில் பொதுமக்கள்

கூடலுாரில் சிவன் கோவில் சொத்துகளை மீட்க நடவடிக்கை: எதிர்பார்ப்பில் பொதுமக்கள்
X
கூடலுாரில் வயல்வெளிகளுக்கு மத்தியில் கட்டப்பட்டுள்ள சிவன் கோயில்.
கூடலுாரில் 17ம் நுாற்றாண்டை சேர்ந்த சிவன் கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை மீட்க வேண்டும்

கூடலுாரில் தாமரைக்குளம் ரோட்டோரம் பல ஆயிரம் ஏக்கர் வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சிவன் கோயில் 17ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் வயல்கள், தோட்டங்கள், தோப்புகள் உள்ளன. இவை அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கி உள்ளன.

விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் கூடலுாரில் இந்த கோயில் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தவிர இந்த கோயிலில் சிவரூபத்தை பார்த்ததாக சொன்னவர்களின் எண்ணிக்கை மட்டும் பல ஆயிரத்தை தாண்டும். இரவில் வயல்களுக்கு தண்ணீர் கட்ட செல்பவர்கள், வயல்களில் பணி முடிந்து வீடு திரும்புபவர்கள் இந்த கோயிலை கடந்து வரும் போது, கோயில் அருகே உள்ள ஆற்று பாலத்தின் மீது முண்டாசு கட்டிய ஒரு நபர் கையில் காவல்காரனை போல் கம்பு வைத்துக் கொண்டு பாலத்தின் மீது ஒரு காலை மற்றொரு கால் மீது போட்டு தோரணையாக அமர்ந்திருந்த உருவத்தை தான் பார்ததாக கூறியவர்களின் எண்ணிக்கை மட்டும் கூடலுாரில் சில ஆயிரத்தை தாண்டும்.

குறி்ப்பாக வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் தொழிலாளிகளான நீராணிக்கம் எனப்படும் தொழிலாளர்களில் மிகப்பெரும்பாலானோர் இந்த ரூபத்தை பார்த்ததாக கூறி உள்ளனர். அந்த அளவு உயிரோட்டம் உள்ள கோயில் இது. இந்த கோயிலுக்குள் எப்போது, யார் போனாலும் சிவலிங்கத்தை சுற்றி பாம்புக்கூட்டம் இருப்பதை காணலாம். ஆனால் இதுவரை இங்கு யாரும் பாம்புகளை அடித்தது இல்லை. பாம்புகளும் யாரையும் தீண்டியதில்லை என்பதும் மிகவும் வியப்பூட்டும் தகவல்.

இந்த கோயில் சீரமைக்கப்படாவிட்டாலும், இந்த கோயிலில் உள்ள தெய்வத்தை மானசீகமாக வணங்காத விவசாயிகள் கூடலுாரில் இருக்க வாய்ப்பு இல்லை. அந்த அளவு மக்களின் அன்பை பெற்ற இந்த சிவன் கோயில் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. இந்த கோயிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தப்போவதாக இந்து சமய அறநிலையத்துறை நோட்டீஸ் ஒட்டி உள்ளது. இதனால் மகிழ்ச்சியில் திளைக்கும் கூடலுார் விவசாயிகள் அப்படியே கோயிலுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் மீட்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
future ai robot technology