மணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
இந்திய ஐக்கிய இளைஞர் மன்றம் தேனி மாவட்ட பேரவை கூட்டம் அல்லி நகரத்தில் நடைபெற்றது. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.
இந்திய ஐக்கிய இளைஞர் மன்றம் தேனி மாவட்ட பேரவை கூட்டம் அல்லி நகரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 21 பேர் கொண்ட மாவட்ட குழுவும் அதில் 7 பேர் கொண்ட நிர்வாக குழுவும் அமைக்கப்பட்டது.
மாவட்ட தலைவராக த. வீரையா, மாவட்ட செயளாலராக ரு. ஹஜ் முகமது, மாவட்ட பொருளாளராக J. ஜவஹர் லெனின், துணை தலைவராக P. சங்கர் கணேஷ், A ஆரோக்யராஜ், துணை செயளாளராக செல்லப்பாண்டி, எஸ்.ரஞ்சித்குமார் ஆகியோர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. UCPI கட்சி மாநில துணை செயலாளர் G.விசாகன் துவக்க உரையாற்றினார். UCPI கட்சி மாவட்ட செயலாளர் வே.பெத்தாட்சி ஆசாத், UCPI கட்சி மாவட்ட துணை செயலாளர் ப. செல்லன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சுப்ரமணி, துரைக்கண்ணு, கோவிந்தராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மாநில செயலாளர் EMS அபுதாஹிர் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பேசினார். கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
1..தேனி மாவட்டத்தில் கனிம வளங்களை சூறையாடும் கும்பல்களிடம் லட்சகணக்கில் லஞ்சம் பெறுவதாக தினமும் பத்திரிக்கை செய்திகள் வெளிவருகின்றனர். இதனால் இந்த செய்திகளை ஆய்வு செய்து மணல் கடத்தல் உள்ளிட்ட கனிமவள திருட்டுக்களில் தொடர்புடைய அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
2. அண்டை மாநிலமான கேரளாவிற்கு லாரி வாரியாக ரேசன் அரிசி கடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். லஞ்சம் பெறும் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu