தேனியில் கார் மோதி ஏழை மூதாட்டி உயிரிழப்பு

தேனியில் கார் மோதி ஏழை மூதாட்டி உயிரிழப்பு
X
தேனியில் கார் மோதிய விபத்தில் ஊனமுற்ற 85 வயது மூதாட்டி உயிரிழந்தார்.

தேனி ஜவகர் தெருவை சேர்ந்தவர் லட்சுமி, 85. இவர் மூன்று மாதங்களுக்கு முன் நடந்த விபத்தில் சிக்கி இரண்டு கால்களையும் இழந்தார். இருப்பினும் பிழைப்பிற்கு வேறு வழியின்றி ரோட்டில் தவழ்ந்து சென்று பேப்பர், அட்டைகள் பொறுக்கி விற்று பிழைத்து வந்தார்.

தேனி பூதிப்புரம் விலக்கு அருகே ரோட்டோரம் அட்டை பொறுக்கிய போது, அந்த வழியாக வந்த கார் மோதி பலத்த காயமடைந்து இறந்தார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!