தேனி மாவட்டத்தில் விபத்து தடுப்பு பணிகள்: கலெக்டர் முரளீதரன் நேரடி ஆய்வு

தேனி மாவட்டத்தில் விபத்து தடுப்பு பணிகள்:  கலெக்டர் முரளீதரன் நேரடி ஆய்வு
X

விபத்து தடுப்பு பணிகள்  குறித்து கலெக்டர் முரளீதரன் ஆய்வு நடத்தினார். இடம்: உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி.

திண்டுக்கல்- குமுளி நான்கு வழிச்சாலை, மதுரை- கொச்சின் தேசிய நெடுஞ்சாலை, மாநில சாலைகளில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு

தேனி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில சாலைகள், நான்கு வழிச்சாலைகளில் விபத்து தடுப்பு குறித்து கலெக்டர் முரளீதரன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டத்தில் திண்டுக்கல்- குமுளி நான்கு வழிச்சாலை, மதுரை- கொச்சின் தேசிய நெடுஞ்சாலை, இதர மாநில சாலைகளில் 40க்கும் மேற்பட்ட இடங்கள் அபாயகரமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில் விபத்துகள் நடக்காமல் தடுப்பது, அதற்கேற்ற வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது, ரோட்டின் அமைப்புகளை மாற்றுவது உள்ளிட்ட பணிகள் குறித்து கலெக்டர் முரளீதரன் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார்.வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள் கலெக்டருடன் சென்றுள்ளனர். அவர்கள் பரிந்துரைத்த பாதுகாப்பு நெறிமுறைகளை அமல்படுத்துவது, அதன் சாத்தியக்கூறுகள் குறித்து கலெக்டர் நேரடியாகச்சென்று கள ஆய்வு செய்தார்.

Tags

Next Story
ai in future agriculture