சின்னமனுார் பைபாஸ்ரோட்டில் நடந்த விபத்து: பூண்டு வியாபாரி பலி

சின்னமனுார் பைபாஸ்ரோட்டில் நடந்த விபத்து:  பூண்டு வியாபாரி பலி
X
சின்னமனுார் பைபாஸ்ரோட்டில் நடந்த விபத்தில் பூண்டு வியாபாரி பலியானார்.

சின்னமனுார் தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் தங்கம், 23. பூண்டு வியாபாரியான இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆனது. இவரது மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சின்னமனுாரில் இருந்து மார்க்கையன்கோட்டைக்கு தங்கம் டூ வீலரில் சென்றார். அப்போது பைபாஸ் ரோட்டில் சென்ற லாரி மோதிய தங்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார். சின்னமனுார் போலீசார் பாலார்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜேஷை கைது செய்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு