உக்ரைனில் வீழ்ந்தது ஒரு வல்லரசின் சாம்ராஜ்யம்.. !.. ?
பைல் படம்
உக்ரைனில் எது நடக்க கூடாதோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கின்றதோ அதுவும் நமக்கு எதிராக நன்றாகவே நடக்கின்றது. இனி எது நடக்குமோ அதுவும் நமக்கு பெரும் கொடுமையாக அமையும்" என தலையில் துண்டு பொட்டு அமர்ந்து விட்டார் ரஷ்ய அதிபர் புட்டீன். எக்காரணம் கொண்டும் நேட்டோ தன் அண்டை நாடுகளுக்குள் வரகூடாது, அப்படி வந்தால் போர் தொடுப்போம் என கடுமையாக மிரட்டினார் புட்டீன். அவரின் பிரதான ஆயுதங்கள் இரண்டு, முதலாவது ரஷ்யாவின் எண்ணெய் இரண்டாவது ரஷ்ய ராணுவம்.
உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடையத் தொடங்கி உள்ள நிலையில், மூன்றாம் உலகப் போர் தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் பெரியளவில் உடன்பாடு ஏற்படாத நிலையில், சில வாரங்களுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தையில் பல விவகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டது.
உக்ரைன் மோதல் மூன்றாம் உலகப் போராக மாறும் அபாயம் உள்ளதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் எச்சரிக்கை விடுத்தார். இந்த போர் தொடங்கியது முதல் ரஷ்யப் படைகளைச் சமாளிக்க உதவும் வகையில், அமெரிக்கா தொடங்கி பல்வேறு மேற்குல நாடுகளும் உக்ரைனுக்கு தொடர்ந்து ராணுவ ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதனால் அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி நடக்கும் சண்டையாக உக்ரைன் போர் மாறியது.
இந்த ரஷ்ய ராணுவ கணக்கு பெரிதாக பொய்த்துப் போனது. ஒரு ஆண்டு போர் நடத்தியும் உக்ரைனுக்குள் நுழைய ரஷ்யாவால் முடியவில்லை இனி முடியவும் முடியாது. எல்லையிலே ரஷ்யா திண்டாடுகின்றது. அதன் கப்பல்படையும் விமானப்படையும் பலத்த இழப்பு காரணமாக ஒதுங்கிக் கொண்டன. புட்டீன் மிகவும் நம்பிய எண்ணெய் மிரட்டலும் கைகொடுக்கவில்லை, ஐரோப்பிய நாடுகள் மாற்றுவழியினை தேடி கொண்டன. உக்ரைனுக்கு இதுவரை தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே மேற்குநாடுகள் வழங்கின. அதாவது ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முடியாமல் தடுத்தால் போதும் எனும் வகையிலே உதவிகள் இருந்தன. அது வெற்றி பெற்றது.
இனி உக்ரைனுக்கு தாக்குதல் ஆயுதங்கள் வழங்கபட்டால் ரஷ்யா நிலை கொஞ்சமல்ல நிறைய சிக்கல்தான். இப்பொழுது நேட்டோவின் ஜெர்மன் தன் ஆயுத தொழிற்சாலையினை உக்ரைனில் திறக்க இருக்கின்றது, அதாவது ரஷ்யா எதற்கு அஞ்சியதோ அது அழகாக நடக்க தொடங்கிவிட்டது. இனி பலநாட்டு ராணுவ தயாரிப்பு நடக்கும், அப்படியே உக்ரைன் நேட்டோ வசமாகும். புட்டீனின் மிரட்டல் எல்லாம் கைகொடுக்கா நிலையில், ரஷ்யாவின் தாக்குதலும் வெற்றிபெறாத நிலையில் இனி புட்டீனால் பெரிதாக ஏதும் செய்துவிட முடியாது. ஆக எது நடந்துவிட கூடாது என புட்டீன் போரை தொடங்கினாரோ அது சரியாக , மிக சரியாக நடந்துவிட்டது
இது இதோடு நிற்காது போலிருகின்றது, இதர ரஷ்ய அண்டை நாடுகளான மால்டோவா, ஜார்ஜியா போன்றவையும் புட்டீன் எங்களையும் அபகரிப்பார் ஏ உலகமே எங்களை பலமாக்கு என கைகளை நீட்டுகின்றன. இனி ரஷ்யாவினை சுற்றி ஏகபட்ட நேட்டோ முகாம்கள் உருவாகலாம், அகலகால் வைத்து வீழ்ந்தது ஒரு சாம்ராஜ்யம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu