விளக்கு மாற்றால் அடித்துக் கொள்ளும் விநோத திருவிழா
ஆண்டிபட்டி மறவபட்டியில் மாரியம்மன் கோயில் விழாவில் விளக்கு மாற்றால் அடித்துக் கொண்ட பக்தர்கள்.
தேனி ஆண்டிப்பட்டி மறவபட்டியில் முத்தாலம்மன் கோயில் திருவிழா பல நுாறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறும் இந்த திருவிழா கடந்த சில ஆண்டுகளாகத்தான் தமிழகத்தின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த விழா பற்றிய அறிவிப்பு வந்து விட்டாலே, மாநிலம் முழுவதும் இருந்து முக்கிய பத்திரிக்கை, தொலைக்காட்சி சேனல்களின் நிருபர்கள் குவிந்து விடுவார்கள். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மிகவும் சுவாராஷ்யமான காரணம் உள்ளது.
மொத்தம் 3 நாள் நடக்கும் இந்த திருவிழா முதல் இரண்டு நாள் வழக்கம் போல் பொங்கல் வைத்தல், முளைப்பாரி எடுத்தல், அக்னிச்சட்டி எடுத்து ஊர்வலம் செல்லுதல் உள்ளிட்ட மரபு சார்ந்த வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். மூன்றாம் நாள் விழா தான் மிகவும் சுவாரஷ்யம் நிறைந்தது. மூன்றாம் நாள் விழாவில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் விளக்கு மாற்றால் அடித்துக் கொள்வார்கள். அப்போது தண்ணீரும் தெளிக்கப்படும். இதனால் அத்தனை பேர் உடலிலும் சேரும், சகதியும், விளக்குமாற்றால் அடிவாங்கிய தடமும் இருக்கும். இது இந்த கிராமத்தில் மிகுந்த பாரம்பரியமான ஒரு நிகழ்ச்சி ஆகும்.
பக்தர்கள் கண்டபடி அத்தனை பேரையும் அடிப்பதில்லை. தங்களது முறைமாமன்கள், மைத்துனர்களை மட்டுமே அடிப்பார்கள். அதுவும் சகதி கலந்த விளக்கு மாற்றால் அடிப்பார்கள். இதில் துளியளவும் விரோதம் இருக்காது. சகதியில் விளக்கு மாற்றை முக்கி அடித்தாலும், அன்பு கலந்த அடியாகத்தான் இருக்கும். ஒருவருக்கு ஒருவர் தன் அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்தும் விதத்தில் இருப்படி அடித்துக் கொண்டு விழா கொண்டாடுவது மிகவும் பாரம்பரியமான வழக்கம். இந்த திருவிழாவை காண சுற்றுயுள்ள கிராமங்களிலும் இருந்தும் பக்தர்கள் குவிந்து விடுவார்கள். நேற்று நடந்த இந்த விழாவிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu