என்னது..? எலுமிச்சை பழம் ஒன்று 20 ரூபாயா..? அப்ப..வெயிலுக்கு ஜூஸ்..புஸ்ஸா..?

என்னது..? எலுமிச்சை பழம் ஒன்று 20 ரூபாயா..? அப்ப..வெயிலுக்கு ஜூஸ்..புஸ்ஸா..?
X

எலுமிச்சை (மாதிரி படம்)

தேனி மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் கிலோ 250 ரூபாயினை எட்டி உள்ளது. சில்லரையில் ஒரு பழம் 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

தேனி மாவட்டத்திலும் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் அனைத்து பழங்களின் விலைகளும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக கோடை காலத்தில் அனைவரும் எலுமிச்சை பழம் வாங்கி ஜூஸ் போட்டு விரும்பி சாப்பிடுவது வழக்கம். எலுமிச்சை பழம் விலை சில்லரை மார்க்கெட்டில் கிலோ 250 ரூபாயினை எட்டி உள்ளது. மொத்த மார்க்கெட் விலையே 200 ரூபாயினை எட்டியுள்ளது. தனியாக தரமான ஒரு பழம் வாங்கினால் 20 ரூபாய் வரை விலை கொடுக்க வேண்டி உள்ளது.

இதேபோல் மாம்பழம் விலை கிலோ 240 ரூபாய், சப்போட்டா 140 ரூபாய், திராட்சை 160 ரூபாய், மாதுளை பழம் 200 ரூபாய், ஆப்பிள் கிலோ 240 ரூபாய் வரை விற்கப்படுகிறது. காய்கறிகளின் விலைகளும் சற்று உயர்ந்துள்ளன. தக்காளி கிலோ 50 ரூபாய், சின்னவெங்காயம் கிலோ 25 ரூபாய், பெல்லாரி 25 ரூபாய் என விற்கப்படுகிறது. பெரும்பாலான காய்கறிகளின் விலைகள் 40 ரூபாயினை கடந்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது, தற்போது காய்கறிகளின் விலை சராசரியாக கிலோவிற்கு 10 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!