தேனி அருகே குடிக்க பணம் தர மறுத்த தாய் மாமாவை கொலை செய்த இளைஞர் கைது

X
By - Thenivasi,Reporter |23 Jun 2022 10:46 AM IST
Today Murder News - தேனி அருகே குடிக்க பணம் தர மறுத்த தாய் மாமாவை கொலை செய்த வாலிபரை உத்தமபாளையம் போலீசார் கைது செய்தனர்.
Today Murder News -தேனி மாவட்டம், உத்தமபாளையம் கோவிந்தன்பட்டியை சேர்ந்தவர் மரியதாஸ் (வயது 62. ).கட்டிட தொழிலாளியான இவர், தனது தங்கை மகன் ஜெயக்குமாரை (24 )தன்னுடன் தங்க வைத்திருந்தார். கடந்த ஜூன் 12ம் தேதி ஜெயக்குமார் தனது தாய்மாமனிடம் குடிக்க 200 ரூபாய் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார் தனது தாய்மாமன் மரியதாஸை கொலை செய்தார். தலைமறைவாக திருப்பூரில் பதுங்கி இருந்த ஜெயக்குமாரை உத்தமபாளையம் போலீசார் கொலை நடந்த 10 நாட்களுக்கு பின்னர் கைது செய்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu