உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் மினி மாரத்தான்

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா  கல்லூரியில் மினி மாரத்தான்
X

உத்தமபாளையம் ஹைச்.கே.ஆர்.ஹைச்., கல்லுாரி சார்பில் நடந்த மினி மராத்தான் போட்டியை டி.எஸ்.பி., ஸ்ரேயா குப்தா தொடங்கி வைத்தார்.

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் மாநில அளவிலான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது.

75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி நடந்தது. கல்லுாரி உடற்கல்வித்துறை சார்பாக கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்த போட்டியானது கோம்பையில் நிறைவு பெற்றது. உத்தமபாளையம் டி.எஸ்.பி., ஸ்ரேயா குப்தா கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழகத்தின் பல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற முதல் ஆறு நபர்களுக்கு (3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள்) பிரிவு வாரியாக பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் தர்வேஷ் முகைதீன், கல்லூரி ஆட்சிமன்ற குழு தலைவர் செந்தால் மீரான், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், கல்லூரியின் முதல்வர் முகமது மீரான் தலைமை வகித்து நடத்தி வைத்தனர். ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை இயக்குனர் அக்பர் அலி செய்திருந்தார்.

Tags

Next Story
ai in future agriculture