தேனி அருகே கள்ளக்காதலை கண்டித்தவர் கழுத்தை அறுத்துக் கொலை: இளைஞர் கைது

Tobacco In Tamil | Tobacco News
X

பைல் படம்.

Tamil Crime News - தேனி அருகே கூழையனுாரில் கள்ளக்காதலை கண்டித்தவரை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Tamil Crime News -தேனி அருகே பாலார்பட்டியை சேர்ந்த ஆட்டோடிரைவர் பிரபு, (20). இவர் ஒரு பெண்ணை காதலித்து, அந்த பெண் கணவருடன் விவாகரத்து பெறாத நிலையில், அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இதனை அந்த ஊரை சேர்ந்த விவசாயி தவசி, (50) கண்டித்துள்ளார்.

இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு நடக்கும். கூழையனுார் பஸ்ஸ்டாண்டில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரபு கத்தியால் விவசாயி தவசியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கொலை வழக்கு பதிவு செய்து பிரபுவை கைது செய்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!