தமிழகத்தில் பாஜக வில் சேரும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் கே.கே.ஜெயராமன் முன்னிலையில் பொதுமக்களுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டன.
தேனி மாவட்டத்தில் பாரத பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள், விளையாட்டு விழாக்கள், நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்க என மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்ற மாவட்ட பா.ஜ., வர்த்தக தலைவர் கே.கே.ஜெயராமன் கூறியதாவது:ஓரு கட்சியின் வளர்ச்சிக்கு அடிப்படையான விஷயம் அதிக உறுப்பினர்கள் சேர்க்கை. அதிலும் தமிழக பா.ஜ.க,வில் புதிய வாக்காளர் களான கல்லுாரி மாணவ, மாணவிகள் அதிகளவில் சேர்ந்து வருகின்றனர். காரணம் தற்போதைய தொழில்நுட்ப உலகில் தொழில்நுட்பங்களை இளைஞர்கள் அதிகம் கையாளுகின்றனர். அவர்கள் இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி, முந்தையகால வளர்ச்சி, தற்போதைய தலைவர்களின் தகுதிகள் திறமைகள், அர்ப்பணிப்பு உணர்வுகள், தேச பக்தி போன்ற பல்வேறு விஷயங்களை ஒப்பிட்டு பார்க்கின்றனர்.
இந்த ஒப்பீடுகளில் பா.ஜ.க, தலைவர்களே சிறந்தவர்கள் என இளைஞர்கள் முடிவுக்கு வருகின்றனர். உலக அளவில் இந்தியா வலுவான ஒரு நாடாக திகழ பா.ஜ.கவின் சிறந்த நிர்வாகமே காரணம் என்பதை இளைஞர்கள் எளிதில் புரிந்து கொள்கின்றனர். இந்த புரிதல் அவர்களை பா.ஜ.க வை நோக்கி இழுத்து வருகிறது. இதனால் பா.ஜ.கவில் சேரும் இளைஞர்கள், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
சமீக காலமாக பா.ஜ.க,வில் வயது முதிர்ந்த வாக்காளர்களை விட, இளைஞர்களே அதிகம் சேர்ந்துள்ளனர். இதனால் கட்சியின் உள்கட்டமைப்மை வலுப்படுத்த பா.ஜ.க விற்கு தற்போது அற்புதமான வாய்ப்பு உருவாகி உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பா.ஜ.க தனது உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் விளக்கி சொல்வதிலும் பா.ஜ.க, பெரும் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க,விற்கு மிகவும் சிறப்பான எதிர்காலம் உள்ளது. அண்ணாமலைக்கு என தமிழகத்தில் தனிப்பட்ட ரசிகர்கள் உருவாகி உள்ளனர். குறிப்பாக எம்.ஜி.ஆருக்கு பிறகு மக்களை கவர்ந்த ஒரு தலைவராக அண்ணாமலை உருவாகி உள்ளார் என்று கூறினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu