தேனி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி

தேனி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி
X
தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று காலை ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 488 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளதாக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று நாட்களாகவே தலா ஒன்று அல்லது இரண்டு பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 2 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுகின்றனர் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!