/* */

அதிசயம்... ஆனால் உண்மை... ஒரு எருமை மாடு விலை ரூ.35 கோடி

வாரம் ஒருமுறை எண்ணெய் மசாஜ், பாதாம், முந்திரி, பிஸ்தா சாப்பிடும் ரூ.35 கோடி மதிப்புள்ள எருமை மாடு சதர் விழாவில் பங்கேற்றது.

HIGHLIGHTS

அதிசயம்... ஆனால் உண்மை... ஒரு எருமை  மாடு விலை ரூ.35 கோடி
X

சதர் விழாவில் தனது ரூ.35 கோடி மதிப்புள்ள எருமை மாட்டுடன் பங்கேற்ற உரிமையாளர் மது.

தமிழ்நாட்டுக்கு பக்கத்து மாநிலமான தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் நகரில் யாதவ சமூக மக்கள் தீபாவளி திருவிழா முடிந்ததும் சதர் விழா என்று ஒரு விழாவினை வழக்கமாக கொண்டாடுவார்கள். இந்த விழாவில் உழவர் காட்சி நடைபெறும். உழவர் திருநாளாக கொண்டாடப்படும் இந்த விழாவில், இந்தியா முழுவதும் இருந்து பசு மாடுகள், எருமை மாடுகள் பங்கேற்கும். பல லட்சம் வி்வசாயிகளும், பல ஆயிரம் வியாபாரிகளும் இந்த விழாவில் பங்கேற்பார்கள்.தெலுங்கானா மாநிலத்தின் மிகப்பெரிய விழாக்களில் ஒன்றான சதர் விழாவில் பங்கேற்ற ஒரு எருமை மாட்டை பற்றிய ருசிகரமான தொகுப்பு இந்த செய்தியில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடந்த சதர் விழாவில் ரூ.35 கோடி மதிப்புள்ள எருமை மாடு பங்கேற்றது. இந்த எருமைமாடு பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்டவை சாப்பிடும் என்பதை அறிந்த மக்கள் ஆச்சரியமடைந்தனர். இந்த சதர் விழாவில் விலை உயர்ந்த எருமை மாடுகள் பங்கேற்கும். இந்த மாடுகளை பார்ப்பதற்காக ஏராளமானோர் திரள்வார்கள். அவ்வாறு வரும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக பலர் போட்டி போட்டு மாடுகளை தயார் செய்து பராமரிப்பார்கள். அதன்படி இந்தாண்டு நகராட்சி மைதானத்தில் நடந்த இந்த விழாவில் நூற்றுக்கணக்கான எருமை மாடுகள் பங்கேற்றன. இதில் ஐதராபாத்தை சேர்ந்த மது என்பவருக்கு சொந்தமான மிக பிரம்மாண்டமான உருவத்தில் இருந்த எருமை மாடு ஒன்றும் பங்கேற்றது.

4 வயதான இந்த எருமை மாட்டுக்கு 'கருடன்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மாட்டின் விலை ரூ.35 கோடியாம். கடந்த 20 நாட்களுக்கு முன்பு அரியானாவில் ஹமத் ஆலம்கானிடம் இருந்து மாட்டை மது வாங்கியுள்ளார். மது தான் வளர்த்து வரும் கருடன் எருமைக்கு தினமும் பால், பிஸ்தா, பாதாம், முந்திரி, ஆப்பிள், கோழி முட்டை, கொண்டைக்கடலை, கடலைப்பருப்பு, வெந்தய விதைகள், வேர்க்கடலை, குஜார், பீட்ரூட் ஆகியவை வழங்குவாராம்.

வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வார்களாம். வாரத்திற்கு ஒருமுறை விஸ்கியும் எருமைக்கு தரப்படுவதாக மது தெரிவித்தார். மது கூறிய இந்த தகவல்களை கேட்டு விழாவில் பங்கேற்ற மக்கள் ஆச்சரியமடைந்தனர். எருமை மாட்டுக்கு வந்த வாழ்வை பாருடா... என அத்தனை பேரும் அசந்து போயினர். ஒரு எருமை மாட்டை முப்பத்தி ஐந்து கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய மது என்பவர் எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருப்பார். அதுவும் அந்த மாட்டினை பராமரிக்க மட்டும் தினமும் பல லட்சம் ரூபாய் செலவு செய்கிறார். இதில் பங்கேற்ற பல ஆயிரம் வியாபாரிகளில் ஒருவர் கூட மதுவின் இந்த மாட்டை விலை பேச முன்வரவில்லை. இத்தனை கோடிகள் போட்டு இந்த மாட்டை வாங்கி பராமரிக்கும் அளவு யாரிடமும் வசதியில்லை என்பதே விலை கேட்காததற்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 30 Oct 2022 4:40 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு
  2. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு
  4. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  5. வீடியோ
    மயிலாடுதுறையில் முதலிடம் பெற்ற மாணவி பகிர்ந்த வெற்றியின் ரகசியம்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  7. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  8. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்