பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை தாலுகா குறித்த புத்தகம் தயார்

பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை  தாலுகா குறித்த புத்தகம் தயார்
X

ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம்.

Kerala Tamilnadu Border -கேரளாவில் உள்ள பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க கோருவதன் காரணம் என்ன? என்பது குறித்து விரிவான புத்தகம் தயாராகி உள்ளது.

Kerala Tamilnadu Border - கேரளாவில் உள்ள பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க கோருவதன் காரணம் என்ன? என்பது குறித்து விரிவான புத்தகம் தயாராகி உள்ளது.

இந்த புத்தகத்தை பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களை பற்றிய 142 ஆண்டு வரலாற்றை புத்தகமாக பதிவு செய்துள்ளோம். முழுக்க இது தமிழர்களின் பூமி என்பதற்கான ஆதாரங்களை படங்களுடன் இந்த புத்தகத்தில் இணைத்துள்ளோம். தமிழர்கள் வாழும் இந்த பகுதிகளை கேரளாவிற்கு கொடுத்தது யார்? மொழிவாரி பிரிவினையின் போது நடந்தது என்ன? அங்கு வாழும் தமிழர்களின் முந்தைய நிலை என்ன? தற்போதைய நிலை என்ன? அவர்கள் என்ன நினைக்கின்றனர்? இப்பகுதிகளின் பரப்பளவு, வாழும் தமிழர்களின் எண்ணிக்கை, அங்குள்ள தலைவர்கள் பற்றிய தகவல்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

தற்போதைக்கு இந்த புத்தகம் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம் உள்ளது. வெளிமார்க்கெட்டில் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. ஒரு புத்தகத்தின் விலை 100 ரூபாய். 240 பக்கங்கள் கொண்டது. ஆதாரங்களுக்கு பல கலர் போட்டோக்களும் உள்ளன. இந்த புத்தகம் தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் விற்பனைக்கு வர உள்ளது என ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!