தேனியில் 75 வது சுதந்திர தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

தேனி பாலசங்கா குழுமத்தின் ஸ்மார்ட் சைக்கிள்ஸ் நிறுவனத்தில் தொடங்கிய சுதந்திர தின சைக்கிள் பேரணியை எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டத்தில் இன்று 75வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேனி பாலசங்கா குழுமம் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. பாலசங்கா குழுமத்தின் ஸ்மார்ட் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் முன்பு தொடங்கிய இந்த சைக்கிள் பேரணியை எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே தொடங்கி வைத்தார். 854 பேர் சைக்கிளில் தேசியக்கொடி கட்டி பங்கேற்றனர்.
பெரியகுளம் ரோடு வழியாக வந்த பேரணி நேரு சிலையில் மதுரை ரோட்டில் திரும்பி, அரண்மனைப்புதுார் விலக்கிற்கு வந்தது. அங்கிருந்து புது பஸ்ஸ்டாண்ட் வழியாக அன்னஞ்சி விலக்கு சென்று மீண்டும் பாலசங்கா குழுமத்தின் ஸ்மார்ட் சைக்கிள் நிறுவனத்தை அடைந்தது. வழியில் நான்கு இடங்களில் சைக்கிளில் வந்தவர்களுக்கு நீர், மோர், கூல்டிரிங்ஸ் வழங்கப்பட்டன. பேரணியின் முன்பு போலீஸ் டூ வீலர் ரோந்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியபடி சென்றனர். முதல் உதவிக்காக தேனி நலம் மருத்துவமனையின் சார்பில் மருத்துவக்குழு பேரணியுடன் சென்றது. மொத்தம் 10 கி.மீ., துாரத்தை சைக்கிள் பேரணி கடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜk., தி.மு.க., அ.தி.மு.க., நிர்வாகிகள், தேனி விளையாட்டுக்கழக நிர்வாகிகள், முக்கிய வி.ஐ.பி.,க்கள், வி.வி.ஐ.பி.,க்கள் உட்பட பல ஆயிரம் பேர் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்ற அத்தனை பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu