தேனி மாவட்டத்தில் 500ஐ கடந்தது தினசரி கொரோனா தொற்று பாதிப்பு

தேனி மாவட்டத்தில் 500ஐ கடந்தது தினசரி  கொரோனா தொற்று பாதிப்பு
X
தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு இன்று 524 ஆக பதிவானது.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 1243 பேர் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டனர். இதன் முடிவுகள் இன்று காலை வெளியானது. இதன் அடிப்படையில் 524 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பு கிடுகிடுவென உயர தொடங்கி உள்ளது. வரும் வாரத்தில் தினசரி பாதிப்பு உச்சத்தை எட்டும் வாய்ப்புகள் உள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story