தேனி மாவட்டத்தில் 513 வார்டு உறுப்பினர் பதவி: இன்று யாரும் மனுதாக்கல் செய்யவில்லை

தேனி மாவட்டத்தில் 513 வார்டு உறுப்பினர் பதவி:  இன்று யாரும் மனுதாக்கல் செய்யவில்லை
X
தேனி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட இன்று ஒருவர் கூட மனுதாக்கல் செய்யவில்லை.

தேனி மாவட்டத்தில் 513 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று மனுதாக்கல் தொடங்கிய நிலையில் ஒரு இடத்தில் கூட மனு தாக்கல் செய்யப்படவில்லை.

தேனி மாவட்டத்தில் 177 நகராட்சி வார்டு உறுப்பினர், 336 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று மனுதாக்கல் தொடங்கியது. மொத்தம் உள்ள 513 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று மாலை 5 மணி வரை ஒருவர் கூட மனுதாக்கல் செய்யவில்லை.

நாளை சனிக்கிழமையும் மனுதாக்கல் மந்தமாக இருக்கும். திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் மனுதாக்கல் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!