36 பணியிடங்களுக்கு 5 ஆயிரம் பேர் போட்டி

36 பணியிடங்களுக்கு 5 ஆயிரம் பேர் போட்டி
X

தேனியில் நடந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்திற்கு முதல் நாள் நேர்காணலில் பங்கேற்றவர்கள் .

தேனி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியில் 36 பணியிடங்களுக்கு 5 ஆயிரம் பேர் போட்டியிடுகின்றனர்.

தேனி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 36 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்காக 2017ம் ஆண்டே அறிவிப்பு வெளியானது. பல்வேறு இடையூறுகள் காரணமாக அதற்கான நேர்காணல் இன்று தொடங்கி வரும் 29ம் தேதி வரை நடக்கிறது. இந்த பணியிடத்தில் சேர 10ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தால் போதும். ஆனால் இந்த பணிக்கு 5 ஆயிரம் பேருக்கு அதிகமானோர் விண்ணப்பித்து உள்ளனர்.

விண்ணப்பித்தவர்களில் 99 சதவீதம் பேர் இரண்டு டிகிரி முடித்தவர்கள். இதில் பெண்களுக்கு 18 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கும் பட்டதாரி பெண்களே விண்ணப்பித்து உள்ளனர். இன்று கால்நடைத்துறை இந்த நேர்காணல் நடத்துகிறது. விண்ணப்பித்த அத்தனை பேருக்கும் நேர்காணலில் பங்கேற்க அழைப்பு அனுப்பி உள்ளது. படித்தவர்களை நேர்காணல் செய்யும் போது, அவர்களில் கல்வித்தகுதியை பார்த்த அதிகாரிகள் வியந்து போனதாக தெரிவித்தனர்.

சாதாரண கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு (சாதாரண ஓ.ஏ., வேலையை விட சற்று தகுதி குறைவான வேலை தான்) இரண்டு டிகிரி முடித்த ஆண், பெண் பட்டதாரிகள் விண்ணப்பித்து இருப்பது சமூகத்தில் உள்ள வேலையில்லா திண்டாட்டத்தின் நெருக்கடி நிலையை உணர்த்துகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai and iot applications in agriculture