வைகை அணையில் இன்றும் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

வைகை அணையில் இன்றும் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
X

வைகை அணையில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வைகை அணையி்ல் இருந்து 6வது நாளாக இன்றும் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீ்ர் திறக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் பலத்த மழை பெய்தது. தேனி வீரபாண்டியில் 38 மி.மீ., உத்தமபாளையத்தில் 23.4 மி.மீ., சோத்துப்பாறையில் 36 மி.மீ., போடியில் 33.8 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 18.2 மி.மீ., மழை பதிவானது. மேகமலை வனப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது.

இந்த மழையால் வைகை ஆற்றில் விநாடிக்கு 3500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்றும் மழை தொடர்வதால், வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே வைகை அணையில் இருந்து இன்று காலை முதல் விநாடிக்கு 5090 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 142 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. தமிழகப்பகுதி வழியாக விநாடிக்கு 1300 கனஅடி தண்ணீரும், கேரள பகுதி வழியாக மீதம் உள்ள உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்