தேனியில் ஐந்து மாதத்தில் 49 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தேனியில் ஐந்து மாதத்தில் 49 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
X
தேனியில் ஐந்து மாதத்தில் 49 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை தேனி மாவட்டத்தில் 120 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு கடந்த ஐந்து மாதத்தில் மட்டும் 49 பேர் இந்த சட்டத்தின் கீழ் கைதாகி உள்ளனர். இவர்களில் கஞ்சா விற்பனை செய்து கைது செய்யப்பட்டவர்களே அதிகம்.

தவிர கொலை, கொள்ளை குற்றவாளிகளும் இந்த சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி எஸ்.பி., அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai healthcare technology