கஞ்சா விற்றதாக ஒரே குடும்பத்தில் தந்தை, தாய், மகன் உட்பட 4 பேர் கைது

Tobacco In Tamil | Tobacco News
X

பைல் படம்.

தேனி மாவட்டம், வருஷநாடு பகுதியில் கஞ்சா விற்ற வழக்கில் தாய், தந்தை, மகன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், வருஷநாடு மலைப்பகுதியில் உள்ள பாலுாத்து கிராமத்தில் கடமலைக்குண்டு இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ., ஜெயக்குமார் உட்பட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது பாலுாத்து சேர்மலையாண்டி கோயில் அருகில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த ஜெயபால், 55, அவரது மனைவி சத்யா, 39, மகன் ஜெயசூர்யா, 23 மற்றும் முத்துதேவன்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டி, 28 ஆகியோரை கைது செய்தார். இவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சா, 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது. ஜெயசூர்யா அவது தந்தை ஜெயபால் மீது பல்வேறு ஸ்டேஷன்களில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!