வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் 4 நாட்கள் தேரோட்டம்

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் தேரோட்டம் தொடங்கியது.
தேனி மாவட்டம், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் விழா மே 10ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் 18ம் தேதி ஊர்பொங்கலுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுக்கு வருகிறது. அதன் பின்னர் வழக்கமான தரிசனம் நடைபெறும்.
விழாவின் நான்காம் நாளான வெள்ளிக்கிழமை மாலை தேரோட்டம் தொடங்கியது. கலெக்டர் முரளீதரன், திண்டுக்கல் டி.ஐ.ஜி., ரூபேஷ் குமார் மீனா, எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே, பெரியகுளம் எம்.பி., ரவீந்திரநாத், வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதாசசி, பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகநாயினார், கோயில் செயல் அலுவலர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
தேரடி வீதிகளின் வழியாக சுற்றி வரும் தேர் வரும் திங்கட்கிழமை நிலைக்கு வந்து சேரும். தேரோட்டம் நான்கு நாள் நடைபெறும். இந்த நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதேபோல் வீரபாண்டியில் கடந்த நான்கு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள், நேற்று நள்ளிரவுக்கு பின்னர் செயல்பட தொடங்கின.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu