30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து சினிமாவில் நடித்த கொலைக்குற்றவாளி கைது
கொலை செய்துவிட்டு முப்பது ஆண்டுகளாக சினிமாவில் நடித்த ஓம்பிரகாஷ். (தரையில் அமர்ந்திருப்பவர்)
ஹரியானா மாநிலம், நரைனா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ். இவர் 1980ம் ஆண்டு மத்திய அரசு பணியில் இருந்தார். அப்போது கார், இருசக்கர வாகனங்களைத் திருடி வந்துள்ளார். இதனால் ஓம்பிரகாஷை போலீசார் கைது செய்துள்ளனர். பிறகு இந்த வழக்கிலிருந்து விடுதலையான ஓம்பிரகாஷ் தொடர்ந்து திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவர் மத்திய அரசு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து 1992ம் ஆண்டு பிவானி என்ற பகுதியில் மீண்டும் கொள்ளையடிக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்தவரைக் கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த வழக்கில் போலீசிடம் இருந்து தப்பிய ஓம்பிரகாஷ் தலைமறைவாகவில்லை. சினிமாவிற்கு சென்று நடிக்க தொடங்கினார். இவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். ஒரு நாள்...ஒரு மாதம் இல்லை... தொடர்ந்து 30 ஆண்டுகளாக தேடி வந்தனர்.
சினிமாவில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்த ஓம்பிரகாஷ் சற்று பிரபலம் ஆகவும் பெரிய வேடங்களில் நடிக்க தொடங்கினார். இவர் சினிமாவில் நடித்து வந்ததால், இவரது படத்தை பலமுறை பார்த்த போலீசார் கூட இவர் தான் தலைமறைவு கொலைக்குற்றவாளி என சற்றும் சந்தேகப்படவில்லை. ஓம்பிரகாஷின் சினிமா வாழ்க்கை மிக நன்றாக போய் கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் போலீசார் ஓம்பிரகாஷ் பற்றி தகவல் கொடுப்பவருக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தனர். அதன் பின்னர் இவரை பற்றி அறிந்த ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே சுதாகரித்த போலீசார் காஜியாபாத்தின் ஹர்பன்ஸ் நகரில் சினிமா சூட்டிங்கில் இருந்த ஓம்பிரகாஷை 30 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்தனர். தகவல் கொடுத்த நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் சன்மானம் கொடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu