வைகையில் 2வது வெள்ள அபாய எச்சரிக்கை: அணை திறக்க வாய்ப்பு

வைகையில் 2வது வெள்ள அபாய எச்சரிக்கை: அணை திறக்க வாய்ப்பு
X

வைகை அணை.

Flood Warnings- வைகை அணை நீர் மட்டம் 69 அடியை தாண்டியதால், 2வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று அணை திறக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.

Flood Warnings- தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அரண்மனைப்புதுாரில் 1.4 மி.மீ., போடியில் 11.6 மி.மீ., கூடலுாரில் 53.4 மி.மீ., மஞ்சளாறில் 19 மி.மீ., பெரியகுளத்தில் 32 மி.மீ., பெரியாறு அணையில் 48.6 மி.மீ., தேக்கடியில் 42.2 மி.மீ., சோத்துப்பாறையில் 4 மி.மீ., உத்தமபாளையத்தில் 14.4 மி.மீ., வைகை அணையில் 4 மி.மீ., வீரபாண்டியில் 4 மி.மீ., மழை பெய்தது.

வைகை அணை நீர் மட்டம் 69 அடியை எட்டியது. வைகை கரையோர மக்களுக்கு 2வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணைக்கு விநாடிக்கு 2700 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையி்ல் இருந்து விநாடிக்கு 69 கனஅடி நீர் மட்டும் மதுரை குடிநீருக்கு திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர் வரத்து மேலும், மேலும் அதிகரிக்கும் நிலையில், இன்று இரவு அணை நீர் மட்டம் 70 அடியை தொட்டதும் திறக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெரியாறு அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 2700 கனஅடி நீர் வந்தது. மழைப்பொழிவு அதிகம் இருந்ததால் இன்று அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு விநாடிக்கு 1866 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் மடடம் 134.65 அடியாக உள்ளது. இன்று இரவுக்குள் அணை நீர் மட்டம் 135 அடியை தாண்டி விடும்.

அதேபோல் மஞ்சளாறு அணையிலும், சோத்துப்பாறை அணையிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மழை பெய்து அணை நீர் வரத்து அதிகரிக்கும் சூழல் உள்ளது. மஞ்சளாறு அணைக்கு வரும் உபரி நீர் முழுக்க வெளியேற்றப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!