தேனி மாவட்டத்தில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

தேனி மாவட்டத்தில் இன்று 24 பேருக்கு  கொரோனா தொற்று பாதிப்பு
X
தேனி மாவட்டத்தில் இன்று ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு 24 பேருக்கு கண்டறியப்பட்டது.

தேனி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாகவே கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. இன்று காலை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 24 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டதால், பாதிப்பு மிக, மிக குறைவாகவே உள்ளது. அதேபோல் இனிமேல் முதல்டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ், பூஸ்டர் டோஸ் போட வேண்டியவர்கள் யாராக இருந்தாலும் மாதம் ஒருமுறை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் தான் போட முடியும். எனவே தடுப்பூசி முகாம்களை மக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்