மேகமலை விலங்குகளை பாதுகாக்க 24 மணி நேர வேட்டை தடுப்பு மையங்கள்

மேகமலை விலங்குகளை பாதுகாக்க 24 மணி நேர வேட்டை தடுப்பு மையங்கள்

மேகமலை.

Meghamalai Hills -மேகமலை வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகளை பாதுகாக்க 24 மணி நேர வேட்டைத்தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

Meghamalai Hills -மேகமலை புலிகள் காப்பகம் 1100 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இங்கு புலிகள், யானைகள், மான்கள் உட்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. அதேபோல் வனவிலங்குகளின் வேட்டைகளும் அதிகளவில் நடந்து வருகிறது. மரம் வெட்டுவது, வன வளங்களை திருடுவது உள்ளிட்ட வனக்குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

வனவிலங்குகள் வேட்டையை தடுக்கவும், வனக்குற்றங்களை தடுக்கவும் 24 மணி நேர வேட்டைத்தடுப்பு மையங்கள் அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

சின்னமனுார், கம்பம், கூடலுார், வருஷநாடு உள்ளிட்ட வனக்குற்றங்கள் அதிகம் நடப்பதாக கண்டறிப்பட்ட இடங்களில் முதலில் வேட்டை தடுப்பு மையங்கள் அமைக்கப்படும். படிப்படியாக இதன் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் வனப்பாதுகாப்பு நுாறு சதவீதம் உறுதிப்படுத்தப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story