தேனி மாவட்டத்தில் லோக்அதாலத்தில் 2,228 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு

தேனி மாவட்டத்தில் லோக்அதாலத்தில் 2,228 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் நடந்த லோக்அதாலத்தில் (தேசிய மக்கள் நீதிமன்றம்) 2228 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது.

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற லோக்அதாலத் நிகழ்ச்சியில் 2228 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது.

தேனி, பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி, போடி கோர்ட்டுகளில் நேற்று லோக்அதாலத் நடைபெற்றது. நீதிபதிகள், வக்கீல்கள், வங்கி அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் 2228 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 6 கோடியே 54 லட்சத்து 73 ஆயிரத்து 338 ரூபாய் வரவு செலவு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது என தேனி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!