குரங்கனி தீ விபத்தில் 22 பேர் பலியான சம்பவம்: ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி

குரங்கனி தீ விபத்தில் 22 பேர் பலியான  சம்பவம்: ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி
X

பைல் படம்

குரங்கனி காட்டுத்தீயில் சிக்கி 22 பேர் உயிரிழந்த சம்பவத்தின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

தேனி மாவட்டம், குரங்கனி மலைப்பகுதி போடி அருகே உள்ளது. மிகவும் இயற்கை எழில் சூழ்ந்த அடர்ந்த வனப்பகுதி. இங்குள்ள கொழுக்குமலை உலகப்பிரசித்தி பெற்றது. ஆறுகள், அருவிகள் நிறைந்த இந்த மலைப்பகுதி எப்போதும் குளுமையுடன் இருக்கும். இதனால் சுற்றுலா பயணிகள் எந்த நேரமும் வனப்பகுதிக்கு வந்து கொண்டே இருப்பார்கள்.

இந்நிலையில், நாட்டை உலுக்கிய சம்பவங்களில் குரங்கணி காட்டுத் தீ விபத்தும் ஒன்று. இந்தச் சம்பவம் நடைபெற்று நான்கு ஆண்டுகள் முடிந்து ஐந்தாவது வருடம் தொடர்கிறது. கடந்த நான்கு வருடத்துக்கு (2018 ) முன் இதே மார்ச் மாதம் 11-ம் நாளில் எதிர்பாராத விதமாக காட்டுத்தீ பற்றியது. இந்தச் சம்பவத்தில் சிக்கி, 23 பேர் பலியான சோகம் இன்னும் தேனி மாவட்ட மக்கள் மனங்களில் ஆறாத வடுவாக இருக்கிறது.



தேனி நலம் டாக்டர் ராஜ்குமார் (மலையேற்ற பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்), டாக்டர் சதீஷ், மருத்துவ பணியாளர்கள் அழகுராஜா, பிரவீன் உட்பட குழுவினர் மலைப்பகுதிக்கு உடனடியாக சென்று அங்கேயே பலரை மீட்டு மருத்துவ முதலுதவிகளை செய்து காப்பாற்றினர். இதனால் பலி எண்ணிக்கை 23க்குள் கட்டுப்படுத்தப்பட்டது. இல்லாவிட்டால் மேலும் அதிகரித்திருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்று, ஐந்தாம் ஆண்டு தொடங்கி உள்ளது. இந்த நிலையில், இச்சம்பவத்தை நினைவு கூறவோ, அடுத்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவோ எந்த நிகழ்வும் அரசு தரப்பில் இருந்து எடுக்கப்படவில்லை. இது வன ஆர்வலர்களையும், வனத்துறையினரையும், சுற்றுலா பயணிகளையும் வேதனைடைய வைத்துள்ளது. ஆனால் தேனி மாவட்ட மக்கள் இந்த சம்பவத்தை மறக்காமல் தொடர்பாக நினைவு கூர்ந்து இறந்த சுற்றுலா பயணிகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future