திரும்ப வந்து சேர்ந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் எவ்வளவு

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் கொண்டு வரப்பட்ட புதிய 2000ம் ரூபாய் நோட்டு குறித்த சர்ச்சைகள் ஆரம்பம் முதலே இருந்து வந்தது.
இந்நிலையில் புழக்கத்தில் இருந்த 2000ம் ரூபாய் நோட்டுக்களில் 3.60 லட்சம் கோடி ரூபாய் நோட்டுக்கள் புழக்கம் குறைவாக உள்ளதாகவும், இந்த நோட்டுகள் குறிப்பிட்ட சில இடங்களில் பல்வேறு காரணங்களுக்காக தேங்கி கிடக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதனை தொடர்ந்து 2000ம் ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக அரசு அறிவித்தது. இந்த 2000ம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற வரும் செப்டம்பர் மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நோட்டுக்களில் மூன்றில் இரண்டு பங்கு திரும்ப வந்து விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் மும்பையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.3.62 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் ரூ.2.41 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் (மூன்றில் 2 பங்குக்கு அதிகம்) ஒரு மாதத்துக்குள் திரும்பப் பெறப்பட்டு விட்டன.
திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் 85 சதவீதமானவை வங்கி சேமிப்புக் கணக்கில் செலுத்தியதன் மூலமாகவும், 15 சதவீத நோட்டுகள் சில்லறை மாற்றியது மூலமாகவும் வங்கிகளுக்கு வந்தடைந்தன. ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டது, நாட்டின் நிதி நிலைத்தன்மையிலும் பொருளாதாரத்திலும் எந்தவித எதிர்மறைத் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu