ஆண்டிபட்டியில் போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

ஆண்டிபட்டியில் போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
X
ஆண்டிபட்டியை சேர்ந்த பாலியல் குற்றவாளிக்கு, தேனி மகிளா நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள மணியகாரன்பட்டி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் தங்கசாமி, 49. இவர் ஒன்பது வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை செய்தார். இது தொடர்பாக சிறுமியின் தந்தை ஆண்டிபட்டி மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் உஷா வழக்கு பதிவு செய்து தங்கசாமியை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தேனி மகிளாநீதிமன்றம் குற்றவாளி தங்கசாமிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. அபராதம் கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

Tags

Next Story
ai future project