கேரளாவில் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு உறுதி

கேரளாவில் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு உறுதி
X

பைல் படம்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு தக்காளி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மழைக்கால தொற்று நோய்களான டெங்கு, எலிக்காய்ச்சல், கொரோனா தொற்று, சிக்குன்குனியா காய்ச்சல்கள் பரவி வருகிறது. இந்நிலையில், நெடுங்கண்டம், பாம்பாடும்பாறை, கருணாபுரம் ஊராட்சிகளில் தக்காளி காய்ச்சலும் பரவி வருகிறது.

நெங்கண்டம் அருகே கல்லாறு அரசு தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., படிக்கும் 20 மாணவ, மாணவிகளுக்கு உடலில் கொப்புளம், அரிப்பு, காய்ச்சல் ஏற்பட்டது. தலைமை ஆசிரியரின் அழைப்பினை ஏற்று பள்ளிக்கு சென்ற மருத்துவக்குழு மாணவர்களை பரிசோதித்து தக்காளி காய்ச்சலை உறுதிப்படுத்தியது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் தக்காளி காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து தேனி மாவட்ட எல்லைகளில் சுகாதார எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

Tags

Next Story
உங்களுக்கும் மனஅழுத்தம் இருக்கலாம்...! கவனமா இருங்க..!