திண்டுக்கல் போக்குவரத்து கோட்டத்தில் தினமும் 2 லட்சம் பெண்கள் இலவச பயணம்

திண்டுக்கல் போக்குவரத்து கோட்டத்தில் தினமும் 2 லட்சம் பெண்கள் இலவச பயணம்
X
மகளிர் இலவச பயணத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ள டவுன் பஸ். (இடம்: தேனி புதிய பஸ்ஸ்டாண்ட்)
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தினமும் 2 லட்சம் பெண்கள் இலவச பேருந்து பயணம் மேற்கொள்வதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய, திண்டுக்கல் போக்குவரத்து கோட்டத்தில் தினமும் 2 லட்சம் பெண்கள் இலவச பஸ் பயணம் செய்வதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்ற திட்டத்தை அறிவித்தார். அனைத்து டவுன் பஸ்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படவில்லை. இந்த திட்டத்திற்கென ஒவ்வொரு போக்குவரத்து டெப்போக்களிலும் இருக்கும் டவுன் பஸ்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பஸ்கள் இலவச பயணத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பஸ்களின் முன்பக்கமும், பின் பக்கமும் 'பெண்கள் இலவச பயண பேருந்து' என எழுதப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்திலும், திண்டுக்கல் மாவட்டத்திலும் மட்டும் சராசரியாக ஒரு நாளைக்கு 2 லட்சம் பெண்கள் இலவசமாக பஸ்களில் பயணம் செய்கின்றனர். தற்போது பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளும் இலவச பயணம் மேற்கொள்வதால் டவுன் பஸ்கள் நெருக்கடியால் திணறி வருகின்றன என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு தீர்வாக இலவச பயண திட்டத்தை அனைத்து டவுன் பஸ்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் எனவும் பெண்கள், மாணவ, மாணவிகள் விரும்புவதாகவும் இந்த விஷயம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு