பெரியகுளத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது

பெரியகுளத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது
X
பெரியகுளம் வாலிபர்கள் இரண்டு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

பெரியகுளம் தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர்கள் மாரிமுத்து 26, செல்லப்பாண்டி 23. இவர்கள் மீது திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர்களை பெரியகுளம் வடகரை போலீசார் கைது செய்தனர். இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார். அதனை ஏற்று இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் முரளீதரன் உத்தரவிட்டார். இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story