தமிழகத்தில் 18 தொகுதிகள்? 'குறி' வைக்கிறது பா.ஜ.க.,
பைல் படம்.
BJP News Tamilnadu -தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒண்ணரை ஆண்டுகள் உள்ளன. வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ.க., இப்போதே வேலைகளைத் துவக்கி விட்டது. அ.தி.மு.க.,வின் நிலை என்னாகும், தி.மு.க., எப்படி செயல்படும் என்பதை பற்றியெல்லாம் பா.ஜ., கவலைப்படவில்லை.
தமிழகத்தில் பா.ஜ.க., நிர்வாகிகள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மேலிடம், தினம் தினம் கட்டளைகளை பிறப்பித்து வருகிறது. இதற்காக குறைந்தபட்சம் மாவட்டம் தோறும் மாதம் இருமுறை மத்திய அமைச்சர்கள் ஆய்வு நடத்த வேண்டும் என்ற செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமும் தொடங்கப்பட்டு விட்டது. மத்திய அமைச்சர்கள் தமிழகம் நோக்கி படையெடுகின்றனர்.
எந்தெந்த தொகுதிகளில், எந்தெந்த ஊர்களில், எந்தெந்த வார்டுகளில், எத்தனை ஓட்டுகள் கிடைக்கும். ஓட்டுக்களை கைப்பற்ற என்ன செய்ய வேண்டும் என்பதில் பா.ஜ.க., தெளிவாக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. இதன் முதல் குறி கொங்கு மண்டலம். கொங்குமண்டலத்தினை அப்படியே துாக்க பா.ஜ.க., மிகவும் வலுவான செயல்திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறது. (அதுவும் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி தொகுதிகள் பா.ஜ.,வின் வெற்றிப்பட்டியலில் இப்போதே இடம் பெற்றுள்ளன). இதனால் தான் தனது பேச்சை கேட்காமல் பிடிவாதம் பிடிக்கும் இ.பி.எஸ்.,ஐ இன்னும் பா.ஜ.க., அனுசரித்தே செல்கிறது. கொங்கு மண்டலத்தை கைப்பற்ற இ.பி.எஸ்.,சின் தயவு தேவை என்பதில் பா.ஜ.க., தெளிவாக உள்ளது. இ.பி.எஸ்., சும் கொங்கு மண்டலம் மட்டுமல்ல, வட மண்டலம், தென்மண்டலத்தையும் கைப்பற்றி தருகிறேன். அ.தி.மு.க.,வை என்னிடம் ஒப்படையுங்கள் என பா.ஜ.க.,விற்கு 'செக்' வைத்துள்ளார்.
ஆனால் பா.ஜ.க.,வின் கணக்கு சற்று வித்தியாசமாக உள்ளது. தென் மண்டலத்தை கைப்பற்ற ஓ.பி.எஸ்., தயவு தேவைப்படும் (சசிகலா, தினகரன் தயவும் தான்) என மதிப்பீடு செய்துள்ளது. இதற்கான சில காரணங்களும் உள்ளன. இதனால் தான் இ.பி.எஸ்.,- ஓ.பி.எஸ்., இடையே சமரசமும் செய்யாமல், பெரிய சண்டையும் வரவிடாமல் கவனமாக காய்களை நகர்த்தி வருகிறது. எப்படியும் அ.தி.மு.க., அதாவது A.D.M.K., என்ற ''ஆன்டி டி.எம்.கே.,'' ஓட்டுக்களை சிந்தாமல், சிதறாமல் லோக்சபா தேர்தலில் கைப்பற்ற என்னவெல்லாம் செய்யலாம் என செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் பா.ம.க.,வையும், தே.மு.தி.க.,வையும் தேர்தல் வெற்றிக்கு எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்த வியூகமும் வகுக்கப்பட்டு வருகிறது. இதனால் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒண்ணரை ஆண்டுகள் இருந்தாலும், பா.ஜ.க., இப்போதே தெளிவான திட்டமிடுதலோடு களம் இறங்கி உள்ளது. தேர்தல் நெருங்க... நெருங்க... பல சுவாரஸ்யங்களை தமிழகம் சந்திக்கப்போகிறது என பா.ஜ.க,, நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே பா.ஜ.க., வின் தேசிய தலைவர் நட்டா விரைவில் தமிழகம் வரப்போகிறார். பிளவு பட்டு நிற்கும் அ.தி.மு.க., தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, முடிந்த அளவு சேர்த்து வைக்க இவர் முயற்சி செய்வார் என சொல்லப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu