மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்து கொலை: 17 வயது சிறுவன் கைது

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்து  கொலை: 17 வயது சிறுவன் கைது
X

பைல் படம்.

கூடலுாரி்ல் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்து கொலை செய்ததாக 17 வயது சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூடலுாரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பாக தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே நேரில் விசாரணை நடத்தினார். இன்ஸ்பெக்டர் பிச்சைமணி தலைமையிலான போலீசார் 17 வயது சிறுவன், மற்றொரு 22 வயது வாலிபரை கைது செய்தனர். இவர்கள் கூலி வேலைக்கு செல்பவர்கள். தினமும் மதுஅருந்தும் பழக்கம் உள்ளவர்கள் என கூறப்படுகிறது. பல நாட்கள் ஒன்றாக மதுஅருந்தி இந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சீண்டியிருக்கிறார்கள். சம்பவத்தன்று போதை அதிகரித்த நிலையில் தலையில் அடித்து கடுமையாக தாக்கி உள்ளனர். அவர் இறந்த நிலையில், இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பல்வேறு தடயங்களின் அடிப்படையில் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!