திட்டச்சாலைகளை முடித்து கொடுக்க 14வது வார்டு காங்., வேட்பாளரிடம் மக்கள் கோரிக்கை

திட்டச்சாலைகளை முடித்து கொடுக்க 14வது வார்டு காங்., வேட்பாளரிடம் மக்கள் கோரிக்கை
X

கூடலுார் பதினான்காவது வார்டில் காங்., வேட்பாளர் நாகராஜ் ஓட்டு சேகரித்தார்.

திட்டச்சாலைகளை முடித்து கொடுக்க 14வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் நாகராஜிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

தேனி நகராட்சியில் 14வது வார்டு காங்., வேட்பாளராக களம் இறங்கி உள்ளவர் நாகராஜ். இவர்களே இங்கு தொடர்ச்சியாக 25 ஆண்டுகளாக கவுன்சிலர் பதவியில் இருந்து வருகின்றனர்.

இவர்கள் குடும்பம் பதவியில் இருந்த காலத்தில் சிவராம்நகர், கோட்டைக்களம் பகுதியில் நகரமைப்பையே நவீனமாக மாற்றி விட்டனர். சிவராரம்நகர்- கோட்டைக்களம் திட்டச்சாலையை இணைத்து சாதனையே படைத்தனர். இது தான் உண்மை. காரணம் இந்த ரோட்டை அமைக்க இவர்கள் பட்ட துயரங்களை பல பக்கங்களுக்கு எழுத வேண்டியிருக்கும்.

ரியல் எஸ்டேட், அரசியல் அதிகார வர்க்கம் இந்த விஷயத்தில் இவர்களை பாடாய் படுத்தி கொடுமை செய்தது. இருப்பினும் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்தனர். இவர்களது முயற்சியால் தான் பங்களாமேடு- பாரஸ்ட்ரோடு- சமதர்மபுரம்- பழைய அரசு மருத்துவமனை- குறிஞ்சிநகர் திட்டச்சாலை அமைக்கப்பட்டது.

இந்த ரோடு பணிகள் தற்போது 200 மீட்டர் மட்டும் இணைக்கப்படாமல் உள்ளது. அதாவது 200 மீட்டர் துாரமும் பாதை அமைத்து ரோட்டை முழுமையாக இணைத்து விட்டனர். ஆனால் தார்ரோடாக மாற்றவில்லை. இன்று நாகராஜ் தனது குழுவினருடன் ஓட்டு கேட்டு சென்ற போது மீதம் இருக்கும் இந்த திட்டச்சாலையை முடித்து தருமாறு மக்கள் கேட்டனர்.

அதேபோல் பயர்சர்வீஸ் ஓடைத்தெருவும், சிவராம்நகர் திட்டச்சாலையும் இன்னும் 100 மீட்டர் துாரம் இணைக்க வேண்டி உள்ளது. அந்த ரோடும் சிவராம்நகர் போல் சிறிய அளவில் மண் ரோடாக உள்ளது. அதனையும் முடித்து தர வேண்டும் என மக்கள் கேட்டனர். வெற்றி பெற்றதும் இந்த பணிகளை முடித்து தருவதாக வேட்பாளர் நாகராஜ் மக்களிடம் உறுதி அளித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!