12 ஆண்டுகளுக்கு பின்னர் "மதுரை- தேனி" ரயில் இன்று துவக்கம்

12 ஆண்டுகளுக்கு பின்னர் மதுரை- தேனி ரயில் இன்று துவக்கம்
X

மதுரையில் இருந்து தேனி வந்த ரயிலை பெத்தாட்சி விநாகர் கோயில் ரயில்வே கேட் அருகே மக்கள் நின்று போட்டோ எடுத்து வரவேற்றனர்.

12 ஆண்டுகளுக்கு பின்னர், இன்று முதல் மதுரை- தேனி அகல ரயில் போக்குவரத்து தொடங்கியது.

மதுரை- போடி இடையே 90 கி.மீ., துாரம் இருந்த மீட்டர் கேஜ் ரயில்பாதை அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டது. இந்த பணிகள் தொடங்கி 12 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தற்போது தேனி வரை மட்டுமே நிறைவடைந்துள்ளது. இந்த பாதையில் ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி நேற்று மாலை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து இன்று காலை முதல் மதுரை- தேனி அகல ரயில் போக்குவரத்து தொடங்கியது. இன்று காலை 8.30 மணிக்கு 12 முன்பதிவு இல்லாத கோச்சுகளுடன் மதுரையில் புறப்பட்ட ரயில், சரியாக 9.35 மணிக்கு தேனி வந்தடைந்தது. தேனியில் இருந்து இன்று மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு 7.35 மணிக்கு மதுரை சென்றடையும். இனிமேல் இடைவெளியின்றி ரயில்போக்குவரத்து நடைபெறும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!