தேனி மாவட்டத்தில் மொத்தம் 11.35 லட்சம் வாக்காளர்கள்: பட்டியல் வெளியீடு

தேனி மாவட்டத்தில் மொத்தம் 11.35 லட்சம் வாக்காளர்கள்: பட்டியல் வெளியீடு
X

தேனி மாவட்ட வாக்காளர்பட்டியலை கலெக்டர் முரளீதரன் வெளியிட, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., கவுசல்யா பெற்றுக்கொண்டார்.

தேனி மாவட்டத்தில் 18 வயது நிரம்பியவர்கள் புதிய வாக்காளர்களாக சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தேனி மாவட்ட வாக்காளர் பட்டியலை கலெக்டர் முரளீதரன் வெளியிட்டார். டி.ஆர்.ஓ., சுப்பிரமணியன், பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., கவுசல்யா, கலெக்டரின் நேர்முக உதவியார் (பொது) அன்பழகன், தேர்தல் தாசில்தார் பாலசண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

கலெக்டர் வெளியிட்ட பட்டியலின் படி ஆண்டிபட்டி தொகுதியில், 2 லட்சத்து 78 ஆயிரத்து 555 வாக்காளர்கள், பெரியகுளம் தொகுதியில் 2 லட்சத்து 87 ஆயிரத்து 807 வாக்காளர்கள், போடி தொகுதியில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 878 வாக்காளர்கள், கம்பம் தொகுதியில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 206 வாக்காளர்கள் உள்ளனர்.

மாவட்டத்தில் 5 லட்சத்து 55 ஆயிரத்து 945 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 79 ஆயிரத்து 293 பெண் வாக்காளர்கள், 208 இதர வாக்காளர்கள் உட்பட மொத்தம் 11 லட்சத்து 35 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த பட்டியல் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் தேதி 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் முறைப்படி விண்ணப்பித்து பட்டியலில் சேரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story