கூடலுார், ராயப்பன்பட்டியில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்: 8 பேர் கைது

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

கூடலுாரில் பல வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ, ராயப்பன்பட்டியில் ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 8 பேரை கைது செய்தனர்.

தேனி மாவட்டம், கூடலுார் இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டியன் தலைமையில் போலீசார் கஞ்சா ரெய்டு நடத்தினர். பல வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

கஞ்சா பதுக்கியதாக அர்ச்சனா, 34, ஜனாதிபதி, 34, செல்வம், 36, அருண், 37, அகிலன், 23, அகிலன், 23, நந்தகுமார், 18, பெருமாள், 27 ஆகியோரை கைது செய்தனர். ராயப்பன்பட்டி போலீசார் வெள்ளைக்கரடு பகுதியில் வாகன சோதனை செய்த போது, கேரளாவிற்கு கடத்திச் சென்ற கோகுல்குமார், 20 என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!