தினமும் 100... இல்ல 200... 300...கணக்கு தெரியாத அளவு கடத்தல்

தமிழகமும் கேரளாவும் தேனி மாவட்டத்தில் மட்டும் 75 கி.மீ., நீளத்திற்கும் அதிகமான எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. குமுளி தேசிய நெடுஞ்சாலை, கம்பம் மெட்டு நெடுஞ்சாலை, போடி- மூணாறு தேசிய நெடுஞ்சாலை என மூன்று முக்கிய ரோடுகள் இரண்டு மாநிலங்களையும் இணைக்கின்றன. இந்த மூன்று ரோடுகளிலும் தமிழகம் மட்டும் 12 சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளது. இதில் போலீஸ், வருவாய்த்துறை, வனத்துறை சாவடிகளும் அடக்கம். அதேபோல் கேரளாவும் அமைத்துள்ளது.
கேரளாவில் இருந்து தமிழகத்தை நோக்கி மருத்துவக்கழிவுகள், குப்பை ஏற்றி வரும் லாரிகளுக்கு மட்டும் கேரள சோதனைச்சாவடிகள் அனுமதி வழங்கும். அதனை தமிழக சோதனைச்சாவடிகள் வரவேற்கும். கேரளாவில் இருந்து எந்த ஒரு அத்தியாவசிய பொருளும் சோதனைச்சாவடிகளை கடந்து தமிழகம் நுழைந்து விட முடியாது. ஆனால் தமிழகத்தில் இருந்து எல்லா அத்தியாவசிய பொருட்களும் கேரளா நோக்கி செல்லும். அரிசி, காய்கறி, பால், மருந்து பொருட்கள் செல்வதை ஒரு வணிகமாக ஏற்கலாம்.
ஆனால் தினமும் இரவில் கல், மண், மணல், எம்.சான்ட் ஏற்றிச் செல்லும் லாரிகளின் எண்ணிக்கை 100ஆ, 200 ஆ, 300 ஆ இல்லை 500 ஆ இது யாருக்குமே தெரியாது. ஏனெனில் கடத்தல்காரர்களின் தொழில்நுட்பமும் திறனும் அப்படி. இவ்வளவுக்கும் தேனி எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து கொண்டு தமிழக- கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளை நேரடியாக கண்காணிக்கும் தொழில்நுட்பம் பல மாதங்களாக அமலில் உள்ளது. சோதனைச்சாவடிக்குள் நடப்பதை கண்காணிக்கும் உயர் அதிகாரிகள், இரவில் ரோட்டில் நடப்பதையும் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu