முல்லை பெரியாறு அணையில் இருந்து கடலுக்கு செல்லும் 10 ஆயிரம் கன அடி நீர்
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.( பைல் படம்.)
முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இன்று பெரியாறு அணையில் 70 மி.மீ., தேக்கடியில் 22 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியை தாண்டியது. அணை நீர் மட்டம் ரூல்கர்வ் படி 139.55 அடியாக உள்ளது. இதற்கு மேல் அணை நீர் மட்டத்தை தற்போது உயர்த்த வழியில்லை. எனவே தமிழகப்பகுதிக்கு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் எடுத்தது போக, மீதம் அணைக்கு கூடுதலாக வரும் 10 ஆயிரம் கனஅடி தண்ணீரும் கேரளா வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நீரை வெளியேற்றாமல் இருந்திருந்தால் இந்த நேரம் அணை நீர் மட்டம் 152 அடியை தொட்டிருக்கும். அவ்வளவு நீரை பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றி உள்ளனர். இந்த நீர் தமிழகம் பக்கம் சென்றிருந்தால் மதுரை, சிவங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களில் இருபோகம் நெல் சாகுபடி செய்திருக்கு முடியும். ஆனால் வீணாக இந்த நீர் முழுக்க கேரளா வழியாக கடலில் சென்று கலக்கிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu