தேனி மாவட்ட அரசு பள்ளி மாணவிகள் 10 பேருக்கு மருத்துவபடிப்பில் இடம்
2021-2022ம் கல்வியாண்டுக்கான'நீட்' தேர்வு 2021 அக்.,12ல் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கவுன்சிலிங் நடந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டு கவுன்சிலிங்கில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 9 மாணவிகளுக்கு எம்.பி.பி.எஸ்., படிக்கவும், ஒருவருக்கு பல் மருத்துவம் படிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதன்படி தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வஇனியமதிக்கு மதுரை அரசு மருத்துவக்கல்லூரி,
மேலசிந்தலைச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி புவனேஸ்வரிக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி,
கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெயதர்ஷினிக்கு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் கிடைத்துள்ளது.
கம்பம் எம்.பி.எல்., அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ரிஸ்வானா பர்வீனுக்கு நீலகிரி அரசு மருத்துவ கல்லூரி,
கம்பம் ஏ.ஆர். அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நுபைலா ரஹ்மத்துக்கு அரியலுார் அரசு மருத்துவக்கல்லூரி,
ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி உஷா நந்தினிக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி,
காமயகவுண்டன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சிபியாவுக்கு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிக்க இடம் கிடைத்துள்ளது.
இவர்கள் தவிர சுயநிதி கல்லூரிகளில்அரசு ஒதுக்கீட்டில் 3 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
கம்பம் ஏ.ஆர். அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அல்பினா பானுவுக்கு ஒசூர் துாய பீட்டர் மருத்துவ கல்லூரி,
ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சிவரஞ்சனிக்கு மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரியிலும் எம்.பி.பி.எஸ்., படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
குச்சனுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி யோகிதாவுக்கு மதுரை பெஸ்ட் பல் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது என தேனி மாவட்ட கல்வி துறை நீட் ஒருங்கிணைப்பாளர் சையது அப்தாஹிர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu