''கூடலுார் 16வது வார்டு மக்களே; ஓரிரு நாளில் சர்ப்ரைஸ்'' - அதிமுக நூதன பிரசாரம்

கூடலுார் 16வது வார்டு மக்களே; ஓரிரு நாளில் சர்ப்ரைஸ் - அதிமுக நூதன பிரசாரம்
X

கூடலுார் நகராட்சி பதினாறாவது வார்டில் அ.தி.மு.க., வேட்பாளர் பா.லோகநாயகி வீடு, வீடாக ஓட்டு சேகரித்தார்.

கூடலுார் நகராட்சி 16வது வார்டு மக்களுக்கு மிகுந்த சர்ப்ரைஸ் உள்ளதாக அதிமுகவினர் நுாதன பிரசாரம் செய்து வருகின்றனர்.

கூடலுார் நகராட்சி 16வது வார்டில் இரட்டை இலை சின்னத்தில் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி வரும் பா.லோகநாயகி களமிறங்கி உள்ளார். இவரது தந்தை பாண்டியராஜன் ஏற்கனவே பல தேர்தல்களை சந்தித்தவர். பல ஆண்டுகளாக மக்கள் பணியாற்றியவர்.

மக்களிடம், கட்சி தலைவர்களிடமும் மிகுந்த நன்மதிப்பை பெற்றவர். பாரம்பரியம் மிகுந்த குடும்பத்தில் இருந்து வந்துள்ள உயர்கல்வி பெற்ற பெண் களம் இறங்கி உள்ளதால் இப்பகுதி மக்களின் ஆதரவு பா.லோகநாயகிக்கு அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில் இன்று அ.தி.மு.க.,வினர் லோகநாயகியுடன் வீடு, வீடாக சென்று ஓட்டு கேட்டனர். அப்போது அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர், '16வது வார்டு மக்களே.. உங்கள் ஓட்டின் மகிமை தெரியுமா? உங்கள் ஓட்டு சாதாரணமானது இல்லை. மிகுந்த மகத்துவம் வாய்ந்தது. நீங்கள் ஒரு மாபெரும் தலைவியை உருவாக்க போகிறீர்கள்' என சிலேடையாக சில விஷயங்களை சொல்லி ஓட்டு கேட்டனர்.

அது என்னய்யா? பெரிய தலைவி என கேட்ட பெண்களிடம், ஓரிரு நாளில் எங்கள் கட்சி மேலிட தலைவர்கள் உங்களிடம் வந்து சொல்வார்கள் என பதிலளித்தனர். இதனால் கூடலுார் 16வது வார்டில் ஒரு புதுவித சர்ப்ரைஸ் உருவாகி உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!